புதினங்களின் சங்கமம்

யாழ்.பல்கலை. மாணவர்கள் – பொலிஸார் இடையே முரண்பாடு! கடும் பதற்றம்!!(படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசின் அடக்குமுறைக்கு எதிராக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கறுப்பு உடை அணிந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனை அறிந்த கோப்பாய் – யாழ்ப்பாணம் பொலிஸார் பல்கலைக்கழக சூழலில் பொலிஸாரை கடமைக்கு அமர்த்தியிருந்தனர். இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் கறுப்பு உடை அணிந்து வீதியில் நின்ற மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு செல்லுமாறு கேட்டனர். எனினும் மாணவர்கள் தமது உரிமையை வலியுறுத்திய நிலையில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.