Home பல்சுவை செய்திகள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் அகால மரணம்!! (Photos)

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் அகால மரணம்!! (Photos)

கனடா ரொரன்ரோவில் வூட்பைன் பீச்சில் நேற்று நடந்த படகு விபத்தில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று நண்பகல் 12:30 மணியளவில் நடந்த குறித்த விபத்தில் வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த3 பிள்ளைகளின் தந்தையான இலங்கைக்கோன் பல்லவநம்பி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது 7 தமிழர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 3 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 3 பேர் விபத்தின் போது படகிலிருந்து தூக்கியெறியப்பட்டு நீந்தி கரைசேர்ந்துள்ளனர்.