புதினங்களின் சங்கமம்

வெளிநாட்டில் மனைவி உழைத்து அனுப்பிய பணத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம்!! நேரில் பார்த்த மனைவி விசம் அருந்தினார்!!

குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் (27) கணவன் மற்றும் பொலிஸார் முன்னிலையில் விசம் அருந்தியுள்ளார்.

குருநாகல், ஹிந்தகொல்ல, தங்கொல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே விசம் அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்து வந்த இந்த பெண், தான் சம்பாதித்த பணத்தை, இலங்கையில் உள்ள தமது வீட்டை கட்டி முடிக்க கணவனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல், மது அருந்துவதற்கும், பெண்களுடன் பழகுவதற்கும் பணத்தை செலவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், இந்த வீட்டிற்கு கள்ளக்காதலியையும் அழைத்து வந்து, மனைவி அனுப்பிய பணத்தில் உல்லாசமாக இருந்துள்ளார்.

நாடு திரும்பிய குறித்த பெண், தான் சம்பாதித்து வீடு கட்டுவதற்காக அனுப்பிய பணத்தை தனது கணவர் அழித்தது மட்டுமன்றி அவருக்கு கள்ளக்காதலி இருப்பதையும் கண்டு குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில், தான் அனுப்பிய பணத்தை மீள பெற்றுத்தரக்கோரி முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டைக் கேட்பதற்காக முறைப்பாட்டாளரும் அவரது கணவரும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டபோது, அவர் தன்னுடன் விசக் குப்பியை எடுத்துச் சென்று தனது கணவர் முன்னிலையில் உட்கொண்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.