Vampan memesபுதினங்களின் சங்கமம்

அம்பிகா அன்ரியுடன் ஊடல் செய்த சுமந்திரன்!! டீயும் வடையும் கொடுத்த அன்ரி!! நடந்தது என்ன??

ஒருமுறை சுமந்திரனுக்கும் அம்பிகா அன்ரிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

திடீரென்று சுமந்திரன் கூறிய ஒரு வார்த்தையில் வாக்குவாதம் டக்கென்று நின்றுவிட்டது.

சுமந்திரன் “ நீர் ரொம்ப அழகாக இருக்கிறீர் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா?”

இதற்கப்புறம் அம்பிகா அன்ரி எதுவும் பேசவில்லை. சமையலறைக்கு சென்று டீ போட்டு வந்தார். கூடவே மலாயன்கபே மெதுவடையம் இருந்தது.

இதில் இருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய நீதி “ நாம் நோயுடன் போராடவேண்டுமே தவிர நோயாளியுடன் அல்ல.”

இது ஒரு பகிடிக்கதைதான். ஆனால் இதை இப்போது இங்கு ஏன் பகிர்கின்றேன் எனில், ஐபிசி ஊடகம் மீது அம்பிகா அன்ரி வழக்கு போட்டிருப்பதாக வந்த செய்தியே.

அம்பிகாஅன்ரி அரசியலுக்கு வரமுன்னர் யாரும் அவரை விமர்சிக்கவில்லை.

அவர் அரசியலுக்கு வந்தபின்பே அதுவும் சுமந்திரன் மூலம் வந்தபடியால்தான் அதிகளவு விமர்சனங்கள் எழுந்தது.

எனவே அவ்வாறான விமர்சனங்கள் தவறென்றால் அதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும். மாறாக வழக்கு போடுவதாக மிரட்டக்கூடாது.

அம்பிகா அன்ரி இதனை உணர்ந்து செயற்படுவார் என நம்புவோமாக.

நன்றி

Balan Chandran