புதினங்களின் சங்கமம்

கொழும்பு கொச்சிக்கடையில் சற்று முன் மீண்டும் குண்டு வெடிப்பு!!

கொச்சிக்கடையில் கிருஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்படுவதற்காக விஷேட அதிரடிப்படையினர் சென்ற வேளையில் வேனில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த இடத்தில் ஒரு வான் நேற்றுமுதல் இருந்ததாகவும் அந்த வானை சோதனையிட்ட போதே குறித்த வாகனம் வெடித்ததாகவும் தெரியவருகின்றது.

நேரம் குறிக்க வைத்த குண்டு பொருத்தப்பட்ட வாகனமே வெடித்துள்ளது. அதனை மக்கள் அவதானித்து எச்சரிக்கை செய்ததால் சேதம் குறைந்துள்ளதாக தெரியவருகின்றது.