புதினங்களின் சங்கமம்

9.30 மணித்தியாலத்தின் பின் வழமை நிலைக்கு திரும்பியது மின்சாராம்!! நடந்தது என்ன??

நாடு முழுவதும் இன்று பல மணி நேரம் மின்துண்டிக்கப்பட்டது. சுமார் 8.30 மணித்தியால மின் துண்டிப்பிற்கு பின்னர் இரவு 9.45 மணியளவிலே நாடு முழுவதும் மின்சார விநியோகம் சீரானது.

கெரவலபட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே மின்துண்டிப்பிற்கு காரணமாக அமைந்தது. எரிவாயுவில் இயங்குவது அந்த மின்உற்பத்தி நிலையம்.

கெரவலப்பிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறையடுத்து, நுரைசோலை மின் உற்பத்தி நிலையத்தில் அதிக அழுத்தம் காரணமாக அங்கும் சிறிய கோளாறு ஏற்பட்டதாக, வடக்கு மின்சாரசபை உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையம் அனல் மின் நிலையம். அதி உயர்வெப்பத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் உடனடியாக திருத்தம் செய்ய முடியாது. வெப்பநிலை இயல்புக்கு திரும்ப ஆகும் பல மணி நேர தாமதத்தின் பின்னரே, தொழில்நுட்ப பிரச்சனையை சீர் செய்து, மீள இயங்க ஆரம்பித்து, போதுமான வெப்பநிலையை எட்டிய பின்னரே மின்விநியோகம் ஆரம்பித்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.