திருகோணமலை ரயில் விபத்தில் நிசாந்தியும் 10 வயது மகனும் பரிதாபகரமாகப் பலி!!
திருகோணமலை – சீனக்குடா பகுதியில் நேற்று (11) பிற்பகல் ரயில் மோதி தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது மகன் ஷெஹான் ஜயம்பதி பெரேரா (10) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.தந்தை கொண்டு வந்த உணவுப்பொதியினை வாங்கிக்கொண்டு ரயில் பாதையை கடக்கும் போதே இந்த விபத்து இடம்பொற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

