யாழில் கடன் தொல்லையால் தற்கொலை செய்த குடும்பப் பெண்!

யாழ் ஊரெழுவில் கடன்தொல்லை தாங்க முடியாமல் குடும்பப் பெண்ணொருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியை சேர்ந்த சுரேந்திரராசன் மரிய ரீதா(வயது 51) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் ஊரெழு கிழக்கு பகுதியில் வசிக்கும் குறித்த குடும்ப பெண் கணவனை இழந்து மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வாழ்ந்து வரும் பிரதேசத்தில் கடன் வாங்கிய நிலையில் நீண்ட நாட்களாக கடனை மீள செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.

கடனை மீள செலுத்த முடியாமல் திணறிய அவர் கடந்த 23 ஆம் திகதி வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக அவர் கோப்பாய் பிரதேச வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு .பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்றைய தினமே மாற்றப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாளில் இருந்து மயக்கம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழதுள்ளார்.

இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)