புதினங்களின் சங்கமம்

யாழ் நோக்கி வந்த ரயில் கனகராஜன்குளம் பகுதியில் யானையுடன் மோதி தடம்புரண்டது!!(Photos)

வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் பகுதியில் ஸ்ரீ தேவி தொடருந்து யானை மீது மோதி ஏற்பட்ட விபத்தினால் தொடருந்து தடம் புரண்டுள்ளதால் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று காலை குறித்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தே விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்துக் காரணமான யானை உயிரிழந்துள்ளது.

தொடருந்தில் பயணித்தவர்களுக்கு பாதிப்பில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதிலும் வடக்கிற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுImage may contain: night.No photo description available.