ஜோதிடம்

இன்றைய இராசி பலன் (20.04.2019)

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை
நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். புதுமை படைக்கும் நாள்.

கடகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். பழைய பிரச்னைகளை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத் தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல் படத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீண் பழி விலகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணப்பலம் உயரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சிறப்பான நாள்.

மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக் காதீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.