புதினங்களின் சங்கமம்

வடமராட்சி கம்பர்மலையில் வாள்வெட்டு; இதுவரை 8 பேர் படுகாயம்!! நடந்தது என்ன?

கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள் வெட்டு – மோதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இரண்டு தரப்புகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியதில் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஊரணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்
பொலிஸார் கூறினர்.