களனிவெளி ரயில் பாதையில்ரயில் மோதி சுக்குநூறான லொறி! பதைபதைக்கும் சிசிரிவி காணொளி
ரயில் கடவையின் ஊடாக பயணித்த சிறிய ரக லொறியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
களனிவெளி ரயில் பாதையில் பாதுக்கை வடருக ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் இன்று (23) பிற்பகல் 3.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன் அதன் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹல்பராவ பகுதியில் இருந்து வந்த சிறிய ரக லொறி ரயில் கடவையை கடந்து பாதுக்கை மீகொட வீதியில் நுழைய முற்பட்ட போது ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து அருகில் உள்ள விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

