புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

வவுனியாவில் மணமகளின் தாயாருடன் கள்ளத் தொடர்பு!! கலியாணத்துக்கு முன்னரே சுவிஸ்மாப்பிளை திருவிளையாடல்!!

தனது மகளை சுவிஸ் மாப்பிளைக்கு திருமணம் செய்து கொடுக்க முயன்ற தாயாரின் செயலை தடுத்து நிறுத்தியுள்ளார் தாயாரின் உறவினர். வவுனியாவைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் 21 வயதான தனது மகளை பெண்ணின் அதே கிராமத்தைச் 33 வயதான சுவிஸ்லாந்தில் வாழும் இளைஞனுக்கு திருமணம் செய்ய முயன்றுள்ளார். குறித்த இளைஞன் 2009ம் ஆண்டுக்குப் பின்னரே சுவிஸ் சென்றுள்ளான். அதன் பின்னர் இருதடவை இலங்கை வந்து சென்றதாகவும் தெரியவருகின்றது. குறத்த இளைஞன் வவுனியாவில் வாழ்ந்த போது மணப்பெண்ணின் தாயாருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அக் குடும்பப் பெண்ணின் கணவன் அப் பெண்ணுடன் பெரும் சண்டையிட்டதுடன் இளைஞனும் கணவனின் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளான். இதனாலேயே அப் பெண் கணவனை வி்ட்டு பிரிந்து வாழ்நது வந்துள்ளார். இந் நிலையில் இளைஞன் வெளிநாடு சென்ற பின்னரும் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்த குடும்பப் பெண் தனது மூத்த மகளை இளைஞனுக்கு திருமணம் செய்ய முற்பட்டு நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது. கடந்த வாரம் திருமணம் நடப்பதற்கு ஆயத்தங்கள் நடந்த போது கணவனின் உறவினர்கள் அங்கு சென்று பெரும் ரகளையில் ஈடுபட்டதுடன் குடும்ப்ப பெண்ணையும் அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன் மணமகளுக்கும் இது தொடர்பாக விளங்கப்படுத்தியதால் மணமகளும் இளைஞனைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனையடுத்து குறித்த மாப்பிளை கொழும்பிலிருந்தே மீண்டும் தனது இடத்துக்கு சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது.