சுமந்திரனின் திருவிளையாடல்!! அணிலேற விட்ட நாய்களாக கூட்டமைப்பு வேட்பாளர்கள்!!
சுமந்திரனின் திருவிளையாடல்!! அணிலேற விட்ட நாய்களாக கூட்டமைப்பு வேட்பாளர்கள்!!
ஏதோ ஒரு விதத்தில் தில்லாலங்கடி வேலை செய்து சுமந்திரன் வேட்பாளர் இலக்கத்தை 1 ஆக பெற்றுள்ளார். இதற்கு தேர்தல்கள் திணைக்களமும் உடந்தையாக நிச்சயம் இருக்கும் என்று கூட்டமைப்பின் அரசியல்தரப்பு வட்டாரங்களில் புகைச்சல்கள் எழுந்துள்ள நிலையில்……. அந்த முதலாம் நம்பர் என்பது உண்மையில் விருப்பு வாக்கில் நிச்சயம் செல்வாக்குச் செலுத்தும் என்பது யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்களின் உளவியல் செயற்பாட்டை வைத்து அறியக்கூடிய உண்மையாகும்.
நன்றாக கல்வி கற்ற அரசியல் தெரிந்த ஒருவர் கூட வாக்களிப்பு நிலையத்தில் ஏற்படும் மனப்பதற்றம் காரணமாக வாக்கு சீட்டில் புள்ளடி போடும் கூட்டுக்குள் நின்று தான் எந்தக் கட்சிக்கு வாக்குப் போட வேண்டும் என்பதை தெரிவு செய்வதில் சொற்ப தாமதம் ஏற்பட்டாலும் மனக்குழப்பம் அடைந்துவிடுவார். அத்துடன் தான் தெரிவு செய்யும் கட்சிக்கு புள்ளடியைப் போட்டாலும் தனது விருப்பு வேட்பாளரின் இலக்கம் என்ன என்பதையே பதற்றத்தில் மறந்துவிடுவார். இந் நிலையில் அவர் 1ம் இலக்கத்திற்கே புள்ளடி போடுவதற்கு முயல்வார். ஏனெனில் அது உளவியல்ரீதியில் நடைபெறும் செயற்பாடாகும். இவ்வாறான நிலையில் படிக்காத பதற்றமாக உள்ள சாதாரணநபர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்…
இவ்வாறான நிலையில் சுமந்திரன் 1 நம்பர் பெற்றது அகர வரிசைப்படி அல்ல என்பதை ஏனையவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அகர வரிசைப்படி வேட்பாளர்களை ஒழுங்குபடுத்தினால் ஏனைய வேட்பாளர்களின் பெயர்களின் விருப்பு இலக்கங்கள் அவ்வாறு வரவில்லை என்பது புரியும்.
ஆகவே சுமந்திரன் எப்படியோ தனது முதலாவது திருவிளையாடலை செயற்படுத்திவிட்டார். ஏனைய கூட்டமைப்பு வேட்பாளர்கள் அணில் ஏறவிட்ட நாய்களாக தற்போது இருக்கின்றார்கள். கூட்டமைப்புக்கு 4 ஆசனங்களே வரும் என்று பலராலும் கணிக்கப்பட்ட நிலையில் சுமந்திரனின் இந்த விளையாட்டால் சரவணபவன் என்ற விக்கட் விழுத்தப்படும் என்பதுடன் விருப்பு வாக்கு அடிப்படையில் சுமந்திரன் பெருமளவு விருப்பு வாக்குப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகவும் சந்தர்ப்பம் உள்ளது.
ஏற்கனவே கழுகை அன்னமெனப் போட்ட வாக்காளர்களின் மன ஓட்டத்தைப் பார்த்தே சுமந்திரன் இந்தத் திருவிளையாடலை கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார் என பலரும் சொல்வது போல் உண்மையாகவும் இருக்கலாம்……

