பளைப் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முற்பட்ட பெண் விதானை மீது கொடூர தாக்குதல்!!
மணல் கொள்ளையை தடுப்பதற்காகச் சென்ற பெண் உத்தியோகத்தா் மீது மணல் கொள்ளையா்கள் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கச்சார்வெளி கிராம சேவகர் பிரிவில் உள்ள செல்வபுரம் பகுதியில் தொடர்சியாக மணல் கடத்தல் இடம்பெறுவதாக மக்களால், குறித்த பகுதியில் தற்காலிக கடமையில் இருந்த பெண் கிராம உத்தியோகத்தருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து அங்கு சென்ற பெண் உத்தியோகத்தர், மணல் ஏற்றிக் கொண்டிருந்தவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
அதன் போது அங்கிருந்த நபர் ஒருவர் உத்தியோகத்தரைத் தாக்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.