புதினங்களின் சங்கமம்

யாழில் கோவிலில் களவெடுத்த கள்ளன் இவன்தான்!! பலரும் பார்க்கப் பகிருங்கள்..!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஆலய கதவை உடைத்து உட்புகுந்த சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்த சங்கிலி, 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஐம்பொன்னிலான கலசம் உட்பட பல பெறுமதியான பொருட்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

ஆலயத்தில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவில் கொள்ளை சந்தேக நபர் கொள்ளையிடும் காட்சி பதிவாகியுள்ள போதிலும் குறித்த நபரை பொலிஸாரால் அடையாளம் காணமுடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சந்தேக நபர் தென்னிலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.