புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் பூட்டிய வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு!

வவுனியா காத்தார்சின்னகுளம் நாலாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிசார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராமமக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்துவருவதாகவும் கிராமமக்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தடயவியல் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்.