முல்லைத்தீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் மையத்தில் கொரோனா சந்தேகநபர் உயிரிழப்பு!
முல்லைத்தீவு, கேப்பாபிலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த முதியவர் ஒருவர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்று இனம் காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் பல்வேறு தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்டவாறு முல்லைத்தீவு, கேப்பாபிலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுமுத்தப்பட்டு வைத்திருந்தவர்களில் ஒருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதையடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அரர் அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.