Vampan memesபுதினங்களின் சங்கமம்

முதலிரவுக் காய்ச்சலும் கொரோனா வைரசும் சுமியும்!!!

 

ஒழுங்கு முறையாக புறோக்கர் மூலம் பேசி கலியாணம் கட்டிய பெரும்பாலான ஜோடிகளில் பெண்ணுக்கு முதல் உறவுக்கு பின் அதே நாளோ அல்லது ஓரிரு நாட்களுக்குள்ளேயோ கடும் நடுக்கத்துடனான காய்ச்சல் அல்லது அடித்துப் போட்டது போலான அலுப்பு நிச்சயம் வந்திருக்கும். ( இங்கு புறோக்கர் மூலம் என ஏன் குறித்து சொல்கின்றேன் எனின் காதலர்களாக இருந்து கலியாணம் கட்டியவர்கள் அரை குறையாக ஏற்கனவே எல்லாவற்றையும் அறிந்து முடித்திருப்பர். அது போல பதிவுத் திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு பின்னர் கலியாணம் கட்டுபவர்களுக்கும் அந்த உணர்வு ஏற்படுவது குறைவு) காய்ச்சல் வந்திருந்தால் மட்டுமே அது கணவனுக்கு தெரியும்… பெரும் அலுப்பாக இருப்பதாக பெண் உணர்ந்திருந்தால் அதை கணவனுக்கு தெரியப்படுத்தமாட்டாள். காய்ச்சல் மற்றும் அலுப்பு பஞ்சி வருவது தொடர்பாக அறிந்தே அந்தக்காலத்து முன்னோர்கள் கலியாணம் நடந்த அடுத்த நாள் உழுத்தம் களி , முட்டைக் கோப்பி மற்றும் சத்தான சாப்பாடுகளை தம்பதிகளுக்கு பரிமாறுவார்கள். தற்போதும் கலியாண வீட்டுக்கு அடுத்தநாள் பெண்ணின் தாய் வீட்டில் இருந்து கொழுக்கட்டை கொண்டு செல்லும் பழக்கம் உள்ளது.

இந்த முதலிரவுக் காய்ச்சல் எதனால் வருகின்றது என எனது நண்பனான வைத்தியர் ஒருவரை அந்தக் காலத்தில் நான் கேட்ட போது அதற்கு அவர் சொன்ன விளக்கம் என்னவெனின் உறுப்புக்கள் துாய்மை இல்லாது இருக்கும் இடத்து பெண்ணின் சிறுநீர் துவாரத்தின் ஊடாக கிருமி செல்வதால் அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டே முதல் உறவுக்குப் பின்னர் காய்ச்சல் வருகின்றது என விளக்கம் தந்திருந்தார். அந்த காலத்தில் நான் அவரது விளக்கத்தை சந்தேகத்துடனேயே நோக்கினேன். திருமணம் முடித்த தம்பதிகள் முதல்தடவையில் இ்வாறு துாய்மை இல்லாமல் இருப்பார்களா என்பது இதை வாசிக்கும் தம்பதிகளுக்கு விளங்கியிருக்கும்….. திருமணத்தின் பின் நீண்டகாலமான பின்னர் உறவின் போது இவ்வாறான காய்ச்சல் வருவதில்லை.. அந்த உறவுகளின் போது மட்டும் துாய்மைகயாக இருந்திருப்பார்களா??

அப்போ ஏன் காய்சல் பெண்ணுக்கு மட்டும் வருகின்றது என நீங்கள் நினைப்பீர்கள்….. அப்படியே டெங்கு நுளம்பின் பக்கம் நீங்கள் பார்வையைச் செலுத்துங்கள்….

1) டெங்கு எதனால் உருவாகின்றது..??? ஏடிஎஸ் என்ற நுளம்பினால் வருகின்றது.
2) அந்த நுளம்புக்கு இந்த வைரஸ் எங்கிருந்து வருகின்றது?? அது நுளம்பிலேயே உருவாகின்றது…

ஒரு மில்லிமீற்றர் அளவான நுளம்பிலேயே ஒரு வைரஸ் உருவாகின்றது என்றால் மனிதர்களில் எத்தனை விதமான வைரஸ்கள் உருவாகலாம்….?? ஒரு மனிதனின் எச்சிலிலேயே ஏராளமான ரைஸ்கள் இருக்கலாம். அதே மாதிரி ஒரு மனிதனின் விந்துப் பாய்மத்திலும் வைரஸ்கள் பெருமளவு காணப்படலாம். இவை பெண்ணின் உள்ளே முதல்முதலில் நுளையும் போது அவற்றை பெண்ணின் உடல் வைரசாக நினைத்து தாக்குதல் நடாத்தும் பொறிமுறையை உருவாக்கியிருக்கலாம்…ஆனால் அடுத்த தடவையும் அதே செயற்பாடு நடக்கும் போது ”பழக்கப்பட்ட கள்ளனை நாய் பார்த்துக் குரைக்காது என்ற நிலையில் அந்த பெண்ணின் உடல் குறித்த ஆணின் விந்துப் பாய்மத்தில் உள்ள வைரசுகளை எதிர்க்காது விட்டுவிடலாம்…… (சில பெண்களின் உடல் கட்டமைப்பு விந்தணுவேயே கிருமி என நினைத்து யோனி்ப் பகுதியில் வைத்தே அழித்துவிடுவதாக கூறப்படுகின்றது. இவ்வாறான பெண்கள் குழந்தை பெறுவது மிகச்சிரமமான காரியமாகும்.)

இதே நேரம் உங்களது துணையை நீங்கள் நீண்டகாலம் பிரிந்து (குறைந்தது 6 மாதங்கள்) மீண்டும் உறவு கொண்டாலும் இதே போல் கடும் காய்ச்சல் அல்லது அலுப்பு குறித்த பெண்துணைக்கு ஏற்படும்…. இதற்கும் நாயையே உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்…..கனகாலம் காணாது விட்டதால் திடீரென ஒருதடவை குலைத்துவிட்டே பின்னர் அது வாலாட்டும்….. அதே போல் திருமணம் முடித்த ஒரு பெண் இன்னொரு துணையுடன் முதல் தடவை உறவு கொண்டாலும் இதே நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்… பெரும்பாலும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களை எதிர்கொணடவர்கள் இதை உணர்ந்திருப்பார்கள்.

சங்க கால இலக்கியத்தில் இந்தக் கருத்துக்களுடன் பல பாடல்கள் வெளிவந்துள்ளன. அதுவும் பல அந்தப்புரப் பெண்களைக் கொண்ட அரசர்கள் ஒருபெண்ணுடன் உறவாடி நீண்ட நாள் கழித்தே மீண்டும் அதே பெண்ணுடன் உறவாடுவான்….. அரசன் உறவாடி சென்ற பின் அந்தப் பெண் உடல் தீயாய் கொதிக்கும் என அந்தப் பெண் புலம்பியதாக எழுதப்பட்ட பாடல் ஒன்றை நான் சில காலத்துக்கு முன் ஒரு பழைய இலக்கிய புத்தகத்தில் வாசித்துள்ளேன்…. ஆனால் அந்தப் புத்தகம் நினைவில் இல்லை….

ஆனால் பாலியல் தொழிலாளிகளாக உள்ள பெண்களுக்கு இந்த வைரஸ்கள் எல்லாம் யுயுபிகளாக இருக்கும்….. அந்தப் பெண்கள் நோய் காவிகளாக இருப்பார்களே தவிர அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருக்காது…. இன்னுமொரு பகிடி என்னவென்றால் விந்துப் பாய்மத்தைச் செலுத்தும் ஆண் உறுப்புக்கே வைரஸ் தொற்றை இவ்வாறான பெண்களால் பரப்ப முடியும். இதை குறித்து வைத்திருங்கள் கீழே இதற்கு ஒரு உதாரணம் தந்துள்ளேன்…..

மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பழக்கப்பட்ட வைரசுக்கு எதிர்ப்பைக் காட்டாது என்பதே எனது அபிப்பிராயமாகும்.

கொரோனா விந்தணுவின் ஊடாகப் பரவுமா????

பரவுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன என்றே நான் சொல்வேன்…. ஒரு விந்து அணுவின் நீளம் அதன் தலையில் இருந்து வால் வரைக்குமாக கிட்டத்தட்ட 50 மைக்ரோ மீற்றர் நீளம் கொண்டது. ஆனால் ஒரு கொரோனா வைரசின் விட்டம் கிட்டத்தட்ட 125 நனோ மீற்றர் நீளம் கொண்டது. மனித விந்தணுவை ஒரு திமிங்கிலமாக நீங்கள் கருதினால் அந்த திமிக்கிலத்தில் 400 கொரோனா வைரசை வரிசையாக நிறுத்த முடியும். எயிட்ஸ் என்ற நோயை உண்டாக்கும் வைரஸ் பாலுறவின் மூலம் பரவும் என்றால் கொரோனா மாத்திரம் பரவாது என்று கூறுவதற்கு இடமில்லை.

வெளிநாடுகளில் பிறந்த புலம்பெயர் நாட்டு தமிழர்களின் பிள்ளைகள் தாயகம் வந்து மணல் விளையாடும் போது அந்த குழந்தைகளில் குறிப்பிடத்தக்கவர்களுக்கு கால்களில் கிருமித் தொற்றால் தொப்பளம் ஏற்பட்டிருக்கலாம்.. ஆனால் அதே பிள்ளைகளுடன் விளையாடிய நம்ம பிள்ளைகளுக்கு அவ்வாறு ஏற்படுவதில்லை. காரணம் அதுவும் முதல் உறவு போலவே…….

கொரோனா வைரஸ் மட்டுமல்ல எந்த வைரசும் கண், மூக்கு, வாயால் மட்டுமல்ல நமது உடம்பில் உள்ள அத்தனை துவாரங்களின் ஊடாகவும் உள் நுளையலாம்…. குறிப்பாக வியர்வையைச் சுரக்கும் தோலினுாடாக உள் நுளைய சந்தர்ப்பம் உள்ளது…. இவற்றை சம்மந்தப்பட்டவர்கள் ஆய்வு செய்தல் வேண்டும்…..

”இதெல்லாம் ஓ.கே….. நீ சொல்லுறவற்றை நம்புறம்….. நம்பாமல் விடுறம்…. அது ஒரு புறம் இருக்கட்டும்…. இதுக்குள்ள எதுக்கு சுமியை இழுத்தனி” என்டு உங்களில் சிலர் கோவப்படலாம்…. சரி ஏன் என்டு சொல்லுறன்…

கொரோனா வைரசை புலிகளுக்கு ஒப்பிட்டு இப்போதைய அரச பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதே வேளை தென்பகுதி பேரினவாதிகள் அனைவரையும் கொரோனா வைரஸ் போலவே தமிழ்த்தேசியத்தில் ஊறிப் போனவர்கள் கருதுகின்றார்கள். இனவாத வைரஸ் எவ்வளவு கொடுமைகளைப் புரிந்தது என்ற அனுபவம் அவர்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. ஆனால் அந்த வைரசுடன் ஒட்டி உறவாடுபவர்களுக்கு அந்த தாக்கம் எப்டியானது என அறிய முடியாது.

இவ்வாறான வைரஸ்களுடன் பழக்கப்பட்ட ஒரு உடம்புக்குரியவர் அந்த வைரஸ்கள் எந்தவித தீமையைம் செய்யாது என்றே எண்ணுவார். அதே வேளை அந்த வைரசைக் கண்டு பயப்படுபவர்களுக்கும் அதை செலுத்த திரிவார். இவ்வாறே சுமி என்ற பேரினவாத வைரசுகளுடன் பழகியவருக்கு அவர்களால் கூறப்படும் புலிக் கொரோனா என்ற வைரஸ் மட்டும் கொடுமையானது என நினைக்கின்றார். ஆனால் அரசாங்கம் வைரசாகக் கருதும் புலிகளுடன் பல தசாப்தங்களாக பழகி உறவாடிய வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பெரும்பாண்மையான தமிழர்களுக்கு புலி என்பது தீங்கு செய்யாத நண்மை செய்ய உருவாகிய அதாவது தமிழீழம் என்ற ஒரு குழந்தையை பிறக்கச் செய்கின்ற ஒரு விந்தணு என்றே கருதினார்கள்……..

சிங்களப் பக்கம் நிற்பவர்களுக்கு புலிகள் கொரோனா வைரசாகவும் தமிழர் பக்கம் நிற்பவர்களுக்கு பேரினவாதிகள் கொரோனாவாகவும் காணப்படுகின்றார்கள். தற்போது சுமி என்ன செய்யப் போகின்றார் என்றால் தன்னில் பழக்கப்பட்ட கொரோனாவை தமிழர்களுக்கு ஏற்ற முற்படுகின்றார். அந்த வைரஸ் அவருக்கு தீங்கிழைக்கவில்லை என்ற காரணத்தை அவர் கூறுகின்றார்.

ஏற்கனவே பெரும்பாண்மையின கொரோனா வைரசின் ஒரு பிரிவான நரித்தனமான வைரசுடன் சேர்ந்து பழகிய கூட்டமைப்பினருக்கு எல்லா வைரசுகளுடனும் பழகிய சுமந்திரன் தற்போது இன்னொரு வைரசை ஊசிமூலம் ஏற்றியுள்ளார். தற்போது மாவை, செல்வம் போன்றவர்களுக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தியுள்ளது. ஏனையவர்களுக்கு அறிகுறி காட்டவில்லை…காட்டினாலும் முதலிரவுப் ணெ் போல அமசடக்காக இருப்பார்கள்….. ஆனால் இந்தக் கூட்டமைப்பு 5 வருடத்துக்கு முதல் இதே வைரசுக்களுடனேயே பழகி வந்துள்ளது. நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் உறவாட முற்பட்டதால் மீண்டும் அந்த முதலிக் காய்ச்சல் மாவை உட்பட்டர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்…….. ……. மற்றபடி அவர்கள் தொடர்ந்து அரசர்களாக வருபவர்களுடன் மட்டும் காசுக்காக தாம்பத்தியம் நடாத்துவார்கள்…..

நன்றி

Vasantharuban Thanapalasingam  பேஸ்புக்