சற்று முன் யாழ் தென்மராட்சியில் இன்று இரவு ஒருவர் வெட்டிப் படுகொலை!
யாழ்ப்பாணம் மிருவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இராசகோன் சிவகுமார் (31 வயது) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் குறித்த நபர் பிறிதொருவரைத் தாக்கியதாகவும் தாக்குதலுக்குள்ளாகியவர் பின்னர் வந்து குறித்த நபரை வெட்டிப் படுகொலை செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

