“என் மனைவி அப்பா அப்பா என கத்தினாள்” லண்டனில் பலியான இலங்கைப் பெண்ணின் கணவர் கண்ணீர்!!
பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்களின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மனைவி பிள்ளைகள் என அனைத்து உறவுகளையும் இழந்து குறித்த குடும்பத்தலைவரான ஜெகா மிகுந்த கவலையில் உள்ளார்.
இந்த கோர சம்பவம் குறித்து ஸ்கை நியூஸிடம் பேசிய ஜெகா,
“எனது மனைவியிடமிருந்து 8.30 மணியளவில் அழைப்பு வந்தது, அவள் “அப்பா அப்பா நெருப்பு” கத்திக் கொண்டிருந்தாள், பின்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டது.
பின்னர் அனைத்தும் மௌனமாகிப் போனது. எனது மனைவி நெருப்பு, நெருப்பு என்று கத்திக்கொண்டிருந்தாள்.”
“ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ஆறுதல் கூறவோ, அவர் என்ன செய்கிறார் என்பதை விவரிக்கவோ இயலாது.” என குறிப்பிடப்படுகின்றது.
இறந்தவர்கள் தனது மகிழ்ச்சியான குழந்தைகள் என்று அவர் விவரித்தார்.
இது ஒரு தாங்க முடியாத சோகம், இந்த விஷயங்களுக்கு யாரும் ஈடு செய்ய முடியாது, இது நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

