புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் இன்று காலை மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!!.

கிளிநொச்சி திருநகர் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதுடைய மங்களதேவன் விஜயகுமார். இவர் தனது வீட்டில் மாட்டுப் பண்ணை ஒன்றை நடத்தி வந்த நிலையில், குறித்த பண்ணையை இன்று காலை 8 மணியளவில் நீர் ஊற்றிக் கழுவியுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனால், மின்தாக்கத்துக்கு உள்ளான குறித்த இளைஞர், உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய குறித்த இளைஞர், பெரும் முதலீட்டாளராக வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு பல்கலைக்கழகக் கல்வியை நிறுத்தி சுயதொழில் முயற்சியாளராக மாறியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.