யாழ் கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லுாரி கொரோனா சந்தேக இராணுவத்தினருக்காக கையகப்படுத்தப்பட்டது!!
யாழ்ப்பாணத்தில் இருந்து விடுமுறைக்காக தமது ஊர்களுக்கு சென்ற ராணுவ வீரர்கள் மீள கடமைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு ள்ளது. இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை கொரோனா தொற்றுடைய எவரையும் கல்லூரிக்கு அழைத்து வரவில்லை யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி விடுமுறையில் நிற்கின்ற படைவீரர்களையே தனிமை படுத்துவதற்காகவே கல்லூரியில் 2 விடுதிகள் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது..

