புங்குடுதீவில் இருந்து மாட்டிறைச்சி கடத்தி வந்தவர்கள் ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!! Video
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கார் ஒன்றில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மடத்துவெளி கடற்படை முகாம் அருகில் , கடற்படையின் உதவியுடன் காரினை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது காரினுள் இருந்து 100 கிலோ இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து காரில் பயணித்த இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் , மீட்கப்பட்ட இறைச்சியையும் இறைச்சியை கடத்தப்பயன்படுத்திய காரினையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.