புதினங்களின் சங்கமம்

யாழில் 8 பேருக்கு கொரோனா!!! கடும் நெருக்கடியில் யாழ்ப்பாணம்!! அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்றைய பரிசோதனையில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

ஒருவர் இவர்களுக்கு உணவு வழங்கியவர்.

ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்.

8 பேர் முழங்காவில் பகுதி கடற்படை முகாமில் நாட்டின் வேறு பகுதியை சேர்ந்த வர்கள். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

( குறிப்பு: அரியாலை பகுதியில் போதகரோடு கூடிய அளவில் தொடர்புடைய 20 பேர் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரிலும் முதல் கட்டமாக April 1, April 3 திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று மிகுதியாக இருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது.)
– வைத்தியர் சத்தியமூர்த்தி

 

இதே வேளை யாழ்ப்பாணத்தில் சில நாட்களில் நீக்கப்பட இருந்த ஊரடங்குச் சட்டம் காலவரையறையின்றி தொடர்ந்து போடப்படும் அபாயமும் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…