புதினங்களின் சங்கமம்

உயிர்த்தெழுதல் ஞாயிறு தாக்குதல் குறித்து சவுதி அரசு தெரிந்தே இருந்தது!

இலங்கையில் ஏப்ரல் 21ம் திகதி நடந்த அனைத்து
மனித குண்டு கோர தாக்குதல்கள் குறித்தும், ஏற்கனவே சவுதி அரசுக்கு தெரிந்தே இருந்து எனவும் , அவர்கள் இலங்கையிலுள்ள சவுதி தூதரகத்தோடு அது குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்களின் ஊடாக , தெரிய வந்துள்ளதாகவும் லெபனானின் தேசிய செய்தி சேவை தெரிவித்துள்ளது.

சஹரான் ஹஸ்மி போன்றவர்களது பெயர்களை பாதுகாப்பு தரப்பினர் தற்போது உறுதிப்படுத்திமையாலும், சௌதி நாட்டு தொடர்புகளை அவர்கள் பேணியமையாலும் , மேலும் உறுதியாகியுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

‘ஹிஜ்ரி’ எனும் இஸ்லாமிய கலண்டர் முறைப்படி, அந்த தகவல் பரிமாறிய ஆவணத்தில் , 11.08.1440 எனும் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஆங்கில கலண்டர் முறைப்படி 2019 ஏப்ரல் 17ம் திகதியாகும். அவர்களூடாக பகிரப்பட்ட ஆவணமானது இலங்கைக்கான சௌதி தூதுவரான அப்துல் நசீர் பின் ஹுசைன் அல் ஹரேத்திக்கு , சௌதி வெளிநாட்டு அமைச்சரான இப்ராகிம் பின் அப்துல் அசாப் அனுப்பப்பட்டதாகும்.

அந்த தகவலில் அராபி மொழியில் கீழ் கண்டவாறு உள்ளது:

அப்துல் நசீர் பின் ஹுசைன் அல் ஹரேத்திக்கு ,

நீங்கள் கீழ்காணும் விடயங்களை உடனடியாக பின்பற்றவும்.

முதலில் உங்களிடமுள்ள ஆவணங்கள் , கம்பியூட்டரில் உள்ள தகவல்கள் மற்றும் வெளிநாட்டு அமைச்சோடு பரிமாறிய அனைத்து விபரங்களையும் அழித்துவிடுங்கள்.

தூதுவராலத்தில் உள்ளவர்கள் தொடர்பில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தயாராக இருங்கள்.

இரண்டாவதாக புலனாய்வு அதிகாரிகள் , பாதுகாப்பு தரப்பு மற்றும் ஆலோசகர்கள் உட்பட ,சௌதி அரசோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவரையும் , எதிர்வரும் 3 நாட்களுக்கு (விசேடமாக உயர்த்தெழுதல் ஞாயிறு தினத்தில்) மக்கள் அதிகமாக உள்ள இடங்களையும் , கிறிஸ்தவ தேவாலங்கள் உள்ள இடங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் செய்யுங்கள்.

மூன்றாவதாக நீங்கள் , ஶ்ரீலங்கா அரசின் ஆட்சியாளர்களின் கருத்துகள் தொடர்பான விபரங்களை எழுத்து மூலம் எமது அமைச்சுக்கு அனுப்பி வையுங்கள்.

இப்ராகிம் பின் அப்துல் அசாப்
வெளிநாட்டு அமைச்சர்

(இதன் படங்கள் ஆங்கில மொழி பெயர்ப்போடு இணைப்பில் உள்ளன.)

இந்த கடிதத்தில் சௌதி முத்திரை பதிக்கப்பட்டுள்ளதோடு , சௌதி அரசின் ஏனைய ஆவணங்களைப் போலவே, வோட்டர் சீல் மார்க்குகள் இந்த கடிதத்திலும் உள்ளன.

அப்படி பரிமாறப்பட்டுள்ள கடிதத்தில் உள்ள தகவல்கள் , ஏனைய சாட்சியங்களோடு ஒத்துப் போகின்றன.

சௌதி வெளிநாட்டு அமைச்சு, இலங்கையிலுள்ள சௌதி தூதுவராலயத்துக்கு அனுப்பியுள்ள தகவலின் படி , அந்நாட்டு ஆட்சியாளர்கள் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் குறித்து முன்னரே சரியாக அறிந்திருந்துள்ளனர் என உறுதியாகிறது.

அதேபோல கடந்த வெள்ளிக் கிழமை கைதான 60 வயதையுடைய முகமது அலியார் எனப்படும் நபர் , சௌதியில் கல்வி கற்றுள்ளார். அவர் திறந்து வைத்த இஸ்லாமிய பள்ளிவாசல் , சௌதி மற்றும் கட்டார் உதவியோடு நிறுவப்பட்டது என அங்குள்ள பெயர்ப் பலகையிலேயே குறிப்பிடப்படுள்ளது. அலியாரால் நடத்தப்பட்ட இந்த இஸ்லாமிய பள்ளிவாசல் , சஹராம் ஹசீமின் பிறந்த ஊரான காத்தான்குடியில் நிறுவப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா போலீசார் வெளியிட்ட தகவலின்படி , கைது செய்யப்பட்ட சந்தேக நபரான அலியார் மற்றும் சஹரான் இருவருக்குள்ளும் அன்யோன்ய உறவுகள் இருந்து வந்துள்ளதாகவும், இவர்கள் மூலம் தற்கொலை குண்டுதாரிகளுக்கான மன நிலையை உருவாக்கும் மன நல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இஸ்லாமிய பள்ளிவாசலை பராமரிப்போரில் சிலர் , அந்த பள்ளிவாசலுக்கான உதவி, பிரதேசத்தில் உள்ளவர்களது நன்கொடையிலும் , மாணவர்கள் தரும் கட்டணத்திலும் , ரியாத்தில் உள்ள அலியாரின் உறவினர்கள் அனுப்பிய பணத்திலும்தான், நடத்தி அதை நிர்வகித்து வந்ததாக சொல்கிறார்கள். சஹரானை அவர்கள் ‘ கடும் போக்கு கொண்டவர்’ எனச் குறிப்பிடுவதோடு , அண்மைக் காலமாக சஹரானை இந்த பள்ளிவாசல் பக்கமே காணக் கிடைக்கவில்லை எனச் சொல்லி சத்தியம் செய்கிறார்கள். ஆனால் போலீசார் அலியார் மற்றும் சஹரான் தொடர்பான தொடர்புகள் இரகசியமாக பேணப்பட்டு வந்துள்ளதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

எது எப்படியாகிலும் பீபீசீ மற்றும் பல்வேறு ஊடகங்கள் வழியாக இப்படியான தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு நல்லதொரு திட்டமிடல் , குண்டுகளை தயார் செய்தல் குறித்த அறிவு , அதற்கான இட வசதி , இவற்றில் ஈடுபடுவோரின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகியன தொடர்ந்து கிடைத்திருக்க வேண்டும் என நம்புகிறார்கள். அலியாருக்கு இருந்த தொடர்புகள் ஊடாக கோடீஸ்வர சௌதிக்காரர்கள் மூலம் , ஆரம்ப நிதியுதவிகள் கிடைத்து வந்துள்ளன என்பதற்கான சாட்சிகள் தற்போது சிக்கியுள்ளன.

சஹரானின் தாக்குதல் தொடர் குறித்து , பகிர்ந்து கொண்ட தகவல்கள், கடிதங்கள் , கம்பியூட்ரில் உள்ள மெயில்கள் ஆகியவற்றை அழித்து விடும்படியும் , ஊரடங்கு சட்டம் பிறப்பிக்குமாறும் செளதி வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்ததிலிருந்து , சௌதி அரசு இலங்கை தூதுவராலயத்துக்கு கட்டளைகளை வழங்கி, செயல்பட்டிருப்பது தெரிகிறது.

சௌதி அரசின் செயல்பாடு?

தாக்குதல் நடந்ததும் இஸ்லாமியர்கள் அதற்கான உரிமையை கோருவதும் , தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக சஹரான் மற்றும் தற்கொலைதாரிகள் சத்திய பிரமாணம் செய்து தமது ஒப்புதலை தெரிவிப்பதை வீடியோவில் பதிவு செய்வதையும் , சௌதி அரசு எதிர்பார்த்துள்ளது. 2014 ம் ஆண்டு சௌதி அரசு , இந்த பயங்கரவாத ஆரம்ப அடிப்படை உருவாக்கத்துக்கான ஆலோசனைகளை வழங்கி , பயங்கரவாத சக்திகளை வளர்த்தமைக்கான சாட்சிகள் கிடைத்திருந்தன.

அமெரிக்காவின் முன்னால் அமெரிக்க ராஜாங்க செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டனிடமிருந்து , கசிந்த ஈமெயில்களில் , சௌதி அரேபியா உட்பட கல்ப் நாடுகள் ,இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி வரும் பிரதானமான நாடுகளாக கண்டிருந்தன.

ஹிலாரி கிளின்டனுக்கு வந்து , கசிந்த மெயில் ஒன்றில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

” உங்கள் தூதுவராயலய புலனாய்வு துறை மூலம் கட்டார் மற்றும் சௌதி அரேபிய நாடுகளின் மேல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் . அவர்களால் தாக்குதல் திட்டங்கள் , அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான அனைத்தும் கொடுக்கப்பட்டு IS மற்றும் ஏனைய பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது”

தனிப்பட்ட சௌதி உதவியாளர்களின் வழியாக பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிகள் கிடைப்பதாக அறிந்திருந்த போதும் , இந்த ஈமெயில் வழியாக சௌதி அரசு , நேரடியாக பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளையும் செய்து வருவது உறுதியானது.

அண்மையில் அலியாருக்கு சௌதியோடு இருந்த தொடர்பாடல்கள் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள விபரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது , ஏப்ரல் 21ம் திகதி நடந்த உயிர்த்தெழுதல் ஞாயிறு தாக்குதல் குறித்த அனைத்து விபரங்களையும் சௌதி அறிந்தே இருந்துள்ளது என உறுதியாகிறது. அந்த குரூர இரத்த ஆறு ஓடுவதற்காக அவர்கள் நேரடியாக பங்கு பற்றியுள்ளமையும் கிடைத்துள்ள ஆதாரங்கள் வழி நிரூபிப்பதாகவே உள்ளது.

Image may contain: outdoor, text that says 'Saudi embassy in Sri Lanka tells citizens to leave as threat of further attacks stays high'No photo description available.Image may contain: textImage may contain: textImage may contain: textImage may contain: text