புதினங்களின் சங்கமம்

சைக்கிள் கட்சி நகரசபைத் தலைவன் மரக்கடத்தலில் ஈடுபட்டானா?

சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நேற்று காலை மீசாலை பகுதியில் குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்ய முயன்றபோது, சாரதி சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் வாகனத்தை கைவிட்டு தப்பிச் சென்றார். பின்னர் பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியதுடன், சாரதியையும் கைது செய்துள்ளனர்.

குறித்த வாகனம் பருத்தித்துறை நகர பிதாவான வின்சன் டீ போல் டக்லஸ் போல் அவர்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த வாகனத்தில் தவிசாளரின் நிறுவனப் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தமை காரணமாக, அது அவருடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை நகர சபையின் நகர பிதாவாக செயற்பட்டு வரும் அவர்மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தமிழ் தேசிய உணர்வாளர்களிடையே பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.