கோரோனா வைரஸைவிட தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் நிதி நிறுவனம்..!!
கிளிநொச்சியில் ஊரடங்கு சட்டத்தின் போதும் அரசின் உத்தரவை மீறி கடன்களை அறவிடும் நிதி நிறுவனங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் சில நிதி நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய நுண் கடன் உள்ளிட்ட கடன்களை தற்போதும் அறவிட்டு வருவதாவும், கடனை தவணைப் பணத்தை செலுத்துமாறு வற்புறுத்துவதாகவும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அனைத்து துறைகளும் முடங்கியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பொது மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் நிதி நிறுவனங்கள் தங்களின் பொது மக்கள் பெற்ற கடன் தவணைப் பணத்தை செலுத்துமாறு வற்புறுத்துவது மிகவும் வேதனையான விடயம் எனவும், இது அரசின் அறிவித்தலை உதாசீனம் செய்கின்ற செயல் என்றும் பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த (01,04,2020) கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்று தன்னிடம் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு தவணைப் பணத்தை உடனடியாக செலுத்துமாறு கடும் தொணியில் அறிவித்துள்ளனர். இதன் போது பொது மக்கள் அரசு கடன்களை தற்போது அறிவிடவேண்டாம் என்று அறிவித்துள்ளது. நாங்களும் தொழிலின்றி இருகின்றோம் எனத் தெரிவித்த போது அரசு சொல்லியா நாங்கள் உங்களுக்கு கடன் வழங்கினோம் எனப் பதிலளித்த நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தவணைப் பணத்தை செலுத்தாது விடின் மேலதிக கட்டணங்கள் அறிவிடப்படும் என எச்சரித்துள்ளனர். இதனால் சிலர் (01,04,2020) ) குறித்த நிதி நிறுவனத்திற்கு சென்று தங்களின் கடன் தவணைப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
அத்தோடு வேறு சில நிதி நிறுவனங்கள் தொலைபேசி ஊடாக கடன் பெற்றவர்களிடம் தொடர்பு கொண்டு கடனை மீளச் செலுத்துமாறு வலியுறுத்தி வருவதாகவும் பொது மக்கள் தரப்பில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

