கோத்தை படும் பாட்டுக்கு குத்தியன் எதுக்கோ அழுதானாம்..! ரணகளத்திலும் மைத்திரியின் கிளுகிளுப்பு!!
உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தொடா்ந்து இலங்கையில் பல பகுதிகளில் பல்வேறு
வன்செயல்கள் தொடா்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதுடன், தீவிரவாத அச்சுறுத்தல் தொடா்பாக
தொடா்ந்தும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக சிலாபம், குருநாகல் போன்ற பகுதிகளில் தொடா்ச்சியாக இஸ்லாமிய மக்களுக்கு
எதிரான வன்செயல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திாிபால
சிறிசேனா சீனாவுக்கு பயணமாகியிருப்பது தொடா்பாகவும்,
அங்கு அவா் எடுத்தக் கொண்ட புகைப்படம் தொடா்பாகவும் நெட்டிசன்கள் கழுவி உத்திக்
கொண்டிருப்பதுடன், ரோம் நகரம் எாிந்து கொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்
கொண்டிருந்த கதையை கூறி ஜனாதிபதிக்கு இப்போது இது தேவைதானா?
என சமூக வலைத்தளங்களில் விமா்சனங்களை எழுதி வருகின்றனா்.