அங்கஜன் தன்னுடைய கம்பத்தை நிமிர்த்தி வைத்திருப்பதால் பெரும் சிக்கல்!!
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் குடும்ப நிறுவனமான ட்றைமாஸ் மீடியா
நிறுவனம், யாழ் மாநகரசபை எல்லைக்கள் சட்டவிரோதமாக நட்ட கேபிள் கம்பங்களை அகற்ற
நடவடிக்கை எடுக்காததால், யாழ் மாநகரசபையில் இன்று பெரும் களேபரம் ஏற்பட்டது.
யாழ் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட்டின் நடவடிக்கைக்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்,
சபையை சுமார் 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார் முதல்வர்.
யாழ் மாநகர எல்லைக்குள் ட்றைமாஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக கேபிள் கம்பங்களை
நாட்டியது. எனினும், மாநகர முதல்வர் அவற்றை அகற்றினார். இதையடுத்து, முதல்வரிற்கு
எதிராக அந்த நிறுவனம் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டது. சொத்துக்களை
சேதப்படுத்தியதாக குறிப்பிட்டு, யாழ் பொலிசார் முதல்வரிற்கு எதிராக யாழ் நீதிவான்
நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். எனினும், கேபிள் நட்டது சட்டவிரோதமானது என
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதையடுத்து யாழ் மேல் நீதிமன்றத்தில் ட்றைமாஸ் நிறுவனம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
யாழ் நீதிவான் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டு, மூன்று மாதங்களாகியும் கேபிள் கம்பங்களை
அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லையென குறிப்பிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி,
ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத கம்பங்களை அகற்ற யாழ் பொலிசார் பாதுகாப்பு வழங்க பின்னடிக்கிறார்கள் என
குறிப்பிட்ட முதல்வர், பொலிசாருக்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற
வேண்டுமென்றும் கோரினார்.
இதையடுத்து, பொலிசாருக்கு கண்டனம தெரிவிக்கும் தீர்மானம் யாழ் மாநகரசபையில்
நிறைவேற்றப்பட்டது.