யாழ் பிரதான தபாலகத்தில் கீறோவாக முற்பட்ட இளைஞனுக்கு யாழ் பொதுமகனின் விண்ணப்பம்!!
தம்பி நீ யார் என்று எனக்குத் தெரியாது. ஊடகங்களில் உனது தமிழ் விசுவாசம் தொடர்பாகவும், நீ யாழ் பிரதான தபாலகத்தில் தமிழ் மொழி வேண்டும் என போராடி வென்றது தொடர்பாகவும் நானும் புளகாகிதம் அடைகின்றேன். ஆனால் நீ ஒரு சாரதியாக உள்ளாய். உனது சாரதியம் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றுக்காகவே நீ தபாலகத்துக்கு சென்றுள்ளாய். நீ தமிழில் வைத்த அதே அக்கறையை தமிழர்கள் மீது வைத்தாயா?? நீ போக்குவரத்தில் குற்றம் புரிந்துள்ளாய். நீ புரிந்த குற்றம் நிச்சயம் ஒரு பொதுமகனை ஏதோ ஒரு வழியில் பாதிப்பதாக அமைந்திருக்கும். அதை நீ யோசித்துப் பார்த்தாயா?? தற்போது யாழ்ப்பாணத்தில் மோட்டச்சயிக்கிளில் முறுக்கிக் கொண்டு திரியும் காவாலிகளில் நீயும் ஒருவனாக இருக்கலாம்?? நீ ஒரு உழைப்பாளியோ அல்லது குடும்பஸ்தனா அல்லது இளைஞனா என்று எனக்குத் தெரிலையவில்லை. நீ வேலை வெட்டி இல்லாமல் உன்ர அப்பா, அம்மாட பணத்தில் அல்லது வெளிநாட்டு உறவுகளின் பணத்தில் வாங்கிய வாகனத்தை பிழையான முறையில் ஓடிவிட்டு அதற்கு சிங்கள அரசாங்கத்திற்கு வீணாக உனது அப்பா அம்மாவின் காசில் பணத்தையும் கட்டிவிட்டு அந்தக் கவலை ஏதும் இன்றி உனக்கு தமிழ் மொழியில் மட்டும் பற்று வந்தால் உன்னை தபால் நிலையத்தில் கடமை புரிந்தவர்கள் விளக்குமாறு கொண்டு துரத்தித் துரத்தி அடித்திருந்தாலும் நான் வரவேற்றிருப்பேன். நீ அங்கு மேற்கொண்ட அட்டகாசத்தையும் பொருட்படுத்தாது பொறுமையாக உனக்கு இன்னொரு பற்றுச்சீட்டு எழுதித் தந்த அந்த தபால்நிலைய ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
உனது காவாலித்தனமாக சாரதீயத்தை கருத்தில் எடுக்காது இந்த செயற்பாட்டில்தான் தமிழ் மொழியை வளர்க்க முற்பட்டதாக நினைத்து அதனை பெரிய சம்பவமாக்கி ஊடகளில் வெளியிட்ட அந்த ஊடகவியலாளர்கள் 24ம் புலிகேசியிலும் விட சிறப்பு மிக்கவர்கள்.
நன்றி

