FEATUREDLatestVampan memes

யாழ் பல்கலை மாணவிகள் மீது பாலியல் சீண்டலா?? மாணவர் ஒன்றியம் சொல்வது என்ன?

யுத்தக்குற்றம் நடைபெறவில்லை என இலங்கை இராணுவமும் அரசாங்கமும் சொல்கின்றது. யாழ் போதனா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் கமலேஸ்வரன் என்ற ஆண் தாதி பெண் தாதியுடன் நள்ளிரவில் படுத்திருந்த சம்பவத்தை கூட யாழ் போதனாவைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தி அப்படி ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்று தெரிவித்திருந்தார்கள்.

மன்னாரில் திருக்கேதீஸ்வர வளைவு பிடுங்கி எறியப்பட்ட சம்பவத்தில் வீடியோ காட்சி இருந்தும் அந்த இடத்தில் பாதிரியார் எவரும் இல்லை என மன்னார் மாவட்ட ஆயர் அறிக்கை வெளியிட்டிருந்தார். வீடியோ ஆதாரம் இருந்த ஒரு சம்பவத்தையே மன்னார் ஆயர் மறுக்கும் போது வீடியோ ஆதாரம் இல்லாத சம்பவங்களை யாரும் மறுக்கலாம் என்பது அப்பட்டமான வெளிப்படை உண்மை.

அதே போல் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அத்துடன் வீடியோவும் வெளி வந்துள்ளது. அதனை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

செய்யிற அலங்கோலம் எல்லாத்தையும் செய்து போட்டு தமிழ்த்தேசியத்தை எடுத்து போர்த்திக் கொள்ளும் நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் வரை இருக்கின்றார்கள். மிக மோசமான தனிநபர் நடத்தைகளைக் கொண்டவர்கள் இவ்வாறான தமிழ்த்தேசியத்தை எடுத்து ஆடையாகப் போட்டுக் கொண்டு நடமாடுவது வழமையான ஒன்றே…..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில்
புதுமுக மாணவிகள் மீது பாலியல் சீண்டல்கள் இடம்பெற்ற என்ற குற்றச்சாட்டை
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடியோடு மறுத்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புதுமுக மாணவர்கள் வரவேற்பு
நிகழ்வில் புதுமுக மாணவிகள் மீது மூத்த மாணவர்கள் சிலரால் பாலியல்
சீண்டல்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படவேண்டும் என்றும் ரெலோ கட்சியின் இளைஞர் அணிச் செயலாளரும்
முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதுதொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று
வெளியிட்டுள்ள அறிக்கையில் சம்பவத்தை முற்றாக நிராகரித்துள்ளது. மாணவர்
ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக
மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும்
செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை.

கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதால் ஒரு தரப்பினர் மீது சேறு
பூசும் நோக்குடன் யாரும் எதையும் குறிப்பிட முடியும். எனினும் ஊடகங்கள் ஊடக
தர்மத்தை மீறிய வகையில் குறித்த அந்தத் தகவல் உண்மையா அல்லது வதந்தியா
என்பதனை ஆராயாமல் குறித்த செய்தியை வலைப்பக்கங்களும், அச்சு ஊடகங்களும்
பிரசுரித்தமை எமக்கு மனவேதனையினை ஏற்படுத்துகின்றது.

தமிழ்த்தேசிய அடக்குமுறைகளிற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து
வருவதால் தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு தரப்பாக யாழ்ப்பாணப்
பல்கலைக்கழக மாணவர் சமூகம் உருவெடுப்பதனை விரும்பாத தரப்புக்கள் திட்டமிட்ட
வகையில் எம்மீது சேறு பூச முயல்வதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சேறு பூசும் நிகழ்ச்சி நிரலுடன்
செயற்பட்டுக் கொண்டிக்கும் வலைப்பக்கங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்
எடுக்கவும் தயங்கமாட்டோம்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளிற்கு எதிராக இறுக்கமான சட்ட நடைமுறைகள்
உள்ளதால் பகிடிவதைகள் எல்லை மீறிய வகையில் இடம்பெறுகின்ற போது பல்கலைக்கழக
நிர்வாகம் முறையான ஒழுக்காற்று விசாரணைகளினை முன்னெடுத்து தண்டனைகள் வழங்கி
வருகிறது.

முதலாம் வருட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வில் பாலியல்
சீண்டல்கள் இடம்பெற்றதாக வதந்திகளை பரப்புபவர்களிற்கும், அதன் உண்மைத்
தன்மையை ஆராயாமல் தமது சுயலாபங்களிற்காய் கண்டன அறிக்கைகள் விடுவதையும்
நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பாலியல் ரீதியான சீண்டல்களில்
ஈடுபடுமளவிற்கு எமது மாணவர்கள் தரங்கெட்டுப்போகவில்லை.

பகிடிவதைகள் என்பதனை தவறான அர்த்தப்படுத்தலுடன் பாலியல் சீண்டல்கள்,
பாலியல் வக்கிரங்கள், பாலியல் வன்முறைகள் என்றவகையில் தவறான வார்த்தைப்
பிரயோகங்களுடன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவது எவ்வளவு தவறானது
என்பதை புரிந்து கொள்ளாது ஒருசில ஊடகங்கள் செயற்படுவது ஊடாக தர்மத்தையே
இழிவுபடுத்தும் ஒன்றாகவே அமையும் என்பதனையும் மனவேதனையுடன் குறிப்பிட
விரும்புகிறோம்- என்றுள்ளது.