புதினங்களின் சங்கமம்

கொரோனா வைரஸ் – உண்மையும், பொய்யும்!! தயவு செய்து பகிரவும்!!

☑️ #பூண்டை (Garlic) சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது பொய்யான தகவல்.

☑️ கொரோனா #சிறியவர்கள் அல்லது #பெரியவர்களுக்கே கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுவும் பொய்யான தகவல். அனைத்து வயதினரையும் இது பாதிக்கும். (ஆஸ்துமா, இதய நோய் உள்ளவர்களை அதிகமாக பாதிக்கும்)

☑️ #Antibiotics வைரஸ்களுக்கு எதிராக செயற்படாது, பக்டீரியாக்களுக்கு எதிராக மாத்திரமே செயற்படும்.

☑️கொரொனா வைரஸ் #குளிரான பிரதேசத்தில் பரவாது என்பது பொய்யான தகவல்
#குளிரோ, #வெப்பமான காலநிலையோ எங்கும் கொரோனா பரவும். நீங்கள் எங்கிருந்தாலும் முன்னெச்சரிக்கையாகவே இருக்க வேண்டியது அவசியம்.

☑️குளிர் அல்லது பனியுடனான வானிலை கொரோனா வைரஸை #அழிக்கும் என்ற தகவலும் பொய்யானது.

☑️ #சூடான #நீரில் குளிப்பதால் கொரோனா வைரஸ் அழிவடையும் என்பதும் பொய்யான தகவல்.

☑️ #நுழம்புகளால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.

☑️ கைகளை உலர்த்த பயன்படும் #Hand_Dryers கொரோனா வைரஸை கட்டுப்படுத்தாது என்பதே உண்மை.

☑️ #Alcohol அல்லது #Chlorine ஐ உடலில் தெளிப்பதால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலாது. வைரஸ் உடலுக்குள்ளேயே பாதிப்பினை ஏற்படுத்தும்.

☑️ நிமோனியா #தடுப்பூசிகள்புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பை வழங்காது.

☑️தொடர்ந்து #மூக்கை உமிழ்நீரில் கழுவுவது புதிய கொரோனா வைரஸால் தொற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

☑️ இதுவரை எவ்வித #மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சையை தீவிரப்படுத்தி குணப்படுத்த முடியும்.

ஆகவே புதிய கொரோனா வைரஸிலிருந்து உங்களைப் #பாதுகாத்துக்_கொள்ள,
▶️ நீங்கள் அடிக்கடி உங்கள் கைகளை alcohol-based hand rub அல்லது soap மூலமாக சுத்தமாக கழுவ வேண்டும்.
▶️ சுத்தமான paper towel அல்லது warm air dryerஐ பயன்படுத்தி #கைகைளை நன்கு #காயவைக்க வேண்டும்.
▶️ மேலும், இருமல் மற்றும் தும்மக்கூடிய எவருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
▶️ உங்கள் கண்கள், வாய் மற்றும் மூக்கைத் தொடுவதை தவிர்க்கவும்.
Source; World Health Organization (WHO)