யாழ் செம்மணியில் சிவலிங்கத்துக்கு அருகில் ஜேசுநாதரும் கால் வைத்தார்!!

நல்லூர் – செம்மணிச் சந்தியில் யாழ்ப்பாணம் வரவேற்பு பலகைக்கு அருகே மற்றும் செம்மணி இந்து  மயானத்துக்கு அண்மையாக என இரண்டு இடங்களில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகைகளால் இன்று (7) ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பதாகைகள் நடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதால்  பொலிஸார் இரவு 11 மணிக்கு அங்கு வந்து சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அத்துடன் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் சாரதியிடன்  பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றனர். இந்தப் பதாகைகள் இரவு 7 மணியளவில் நடப்பட்டதாக  பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்த ஊடகவியலாளர்களும் அங்கு கூடினர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவு கத்தோலிக்க மக்களால் அகற்றப்பட்டதையடுத்து ஏற்பட்ட  குழப்பநிலை போன்று இங்கு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

error

Enjoy this blog? Please spread the word :)