யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் குப்பைக்கு வைத்த தீ அருகே நிறுத்தி வைத்திருந்த விசைப் படகு ஒன்றிற்கும் பரவியது.
இவ்வாறு பரவிய தீயை பொலிஸார் அணைக்க முற்பட்டபோதும. தீ வேகமாக பரவியது. வேகமாக பரவிய தீயானது கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் முன்பாக நாட்டப்பட்டிருந்த பொலிஸ் நிலையப் பெயர்ப் பலகைக்கும் பரவியது.
தீயை கட்டுப்படுத்த அரை மணி நேரமாக முயன்றபோதும் படகு மற்றும. பெயர்ப் பலகை என்பன முற்றாக எரிந்து நாசமாகியது. ஏனைய இடங்களிற்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.





