என்னை நோக்கி வரும் தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்க இருக்கும் கேள்விகள் இவைதான்.

என்னை நோக்கி வரும் அரசியல்வாதிகளிடம் கேட்க இருக்கும் கேள்விகள் இவைதான்.
1. போர் முடிந்து பத்தாண்டுகள், நிரந்தரமான அபிவிருத்திக்கு என்ன வேலைத்திட்டங்களை செய்திருக்கிறீர்கள்? (கோழி குடுத்தம், ஆடு குடுத்தம், காக்கா குடுத்தம் கதைகள் வேண்டாம். ஏனொனில் நீங்கள் குடுத்த காத்தான்குடி குஞ்சுகள், நீங்கள் குடுத்துப்போட்டு படலையத்தாண்டவே சுருண்டு விழுந்த கதைகள் உங்களுக்கும் தெரியும்)
2. கடந்த பத்தாண்டுகளில் நுண்நிதிக்கடன் ஒரு தற்கொலைப் பேயாக மாறி பல பெண்களை அழித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த/ மக்களை வழிப்படுத்த என்ன செய்திருக்கிறீர்கள்?
3. இங்கு நடந்தது/ நடந்துகொண்டிருப்பது இனப்படுகொலைதான் என நம்புபபவர் நீங்களெனில் உங்களுக்கிருக்கும் பொறுப்பின்படி அதற்காக எவ்வளவு ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளீர்கள் ?
4. வடக்கு, கிழக்கு பகுதிகளின் மூலை முடுக்கெல்லாம் களமிறங்கி காரியமாற்றும் இந்தியா குறித்து எந்தக் கட்சியும்”இந்தியா நம் நட்பு நாடு” என்பதை தாண்டி ஒரு அறிக்கைதானும் விடவில்லையே ஏன்?
5. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் சைவ xகிறீஸ்தவ மதப் பூசல்களைத் தடுக்க நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
5. வடக்கு, கிழக்கெங்கும் பன்னாட்டு கொம்பனிகளும், தெற்கு கொம்பனிகளும் இயற்கை வளச் சுரண்டல்கள் பற்றி வாயே திறப்பதில்லை ஏன்?
6. நமது மக்களளவில் பொருளாதாரம், சுய வேலைவாய்ப்பு, கல்வி, தொழில்நுட்ப விருத்தி, விவசாயம், உள்ளிட்டவைகளை விருத்தியடையச் செய்யாமல், இலங்கை அரசோ, சர்வதேசமோ தரப்போகிற தீர்வு? இந்த இனத்தின் இருப்புக்கு போதுமானதென கருதுகிறீர்களா?
7. இங்கிருக்கிற அனைத்து தமிழ் அரசியல் கூட்டணிகளுமே(ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளின் இணைவு) பதிவுசெய்யப்படாமல் இருப்பதற்கு தமிழர்களுக்கு நீங்கள் கூறும் விளக்கமென்ன?
8. வறுமை காரணமாக இராணுவத்திடம் வேலைக்கு செல்லும் முன்னாள் போராளிகள் குறித்து அக்கறை காட்டாமை ஏன்? ஏதாவது அக்கறை காட்டியிருப்பின் அதன் விபரத்தை வெளிப்படுத்துங்கள்.
9. இலங்கை அரசின் ஜனநாயகத்தையும் அரசியல்வாதிகளையும் காப்பாற்ற இலவசமாக நீதிமன்றங்களில் களமாடும் நீங்கள் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு ஏன் ஒரு வழக்கு தொடர முடியவில்லை?
10. கண்ணீரையும் உடல் வருத்தலையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு போராடிவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டத்தை ஏன் கட்சிகளுக்கிடையிலான போராட்டமாக மாற்றிவருகிறீர்கள்? அப்போராட்டத்தை நீர்த்துப்போக செய்தீர்கள்?

இந்தப் பத்துக்கேள்விக்கும் பதில் இருந்தால் வாங்கோ சொக்கர் கடையிலோ, சண்முகம் கடையிலோ, மலாயன் கடையிலோ(யாழ்ப்பாணத்தில்) ஒரு இஞ்சிப்பிளேன்ரீ அடிச்சிக்கொண்டே உரையாடுவம். காசு நீங்கள்தான் குடுக்கவேணும்)

-Jera Thampi-

error

Enjoy this blog? Please spread the word :)