புலிகளின் தலைவரின் படத்தைப் போட்டு டிக்டொட் செய்த இளைஞன் TID பொலிசாரால் கைது!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரபல சமூக வலைத்தளமான டிக்டொக்கில் வீடியோவாக பதிவேற்றிய முல்லைத்தீவு பகுதி இளைஞனொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்காவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்பையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டனாலேயே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் இளைஞனின் கைத்தொலைபேசியில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வீடியோக்கள் காணப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)