புதினங்களின் சங்கமம்

ஆமிக்காரர்களின் அடிவருடிகளால் யாழ் பல்கலைக்கழகத்தில் ராக்கிங் செய்த மாணவனின் வீடு தாக்குதல்!!(Photos)

யாழில் போதைப்பொருள் மற்றும் கஞ்சா போன்றவற்றைப் பாவித்து பல்வேறு கேவலங்களைச் செய்துவரும் ஆவா குழு என்ற போர்வையில் ஆமிக்காரர்களால் வழிநடாத்தப்படும் காவாலிகளால் யாழ் பல்கலைக்கழகத்தில் ராக்கிங் செய்த வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீடு அடித்து நொருக்கப்பட்டுள்ளது. குறித்த காவாலிகள் தங்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த அலங்கோல வேலையைச் செய்துள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் பல்கலைக்கழகத்தின் பெயரால் கேவலமான முறையில் ராக்கிங் செய்யும் ஒரு சில மாணவர்களால் ஏனைய மாணவர்களுக்கும் இழுக்கு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் குறித்த ஆவாக்குழுக் காவாலிகள் மக்கள் மத்தியில் தங்களை பிரபலப்படுத்துவதற்காக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள். இந்தக் காவாலிகளின் பிரதான வேலை போதைப்பொருள் மற்றும் ரவுடித்தனம் என்பது பொலிசார் உட்பட அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். குறித்த காவாலிகள் மேற்கொண்ட இந்தத் தாக்குதல் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வரவேற்பு கொடுத்தால் ஆவாகுழுக் காவாலிகள் செய்யும் கேவலமான வேலைகள் மூடிமறைக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ராக்கிங்கை சாட்டாக வைத்துக் கொண்டு அரச தரப்பு இவ்வாறான காவாலிகளை ஏவி தமிழர்களின் நலன்களை சிதைக்கின்ற வழிவகைகளையும் மேற்கொள்ளலாம் என சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பரவியுள்ளன.

ஓணான் போன்ற இந்த உருவ அமைப்புக் கொண்டவனான் வினோத் என்பவனே ஆவா குழுவின் லீடர் என்பதை அனைவரும் அறிய வேண்டியது அவசியமாகும். கஞ்சா அடிமையான இவனை 2013ம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இராணுவத்தளபதியாக இருந்த ஹத்துருசிங்கவே பிரபலமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

Image may contain: 1 person