அலரிமாளிகை முன் பயங்கரம்!! அதிரடிப்படை வீரர் தற்கொலை செய்தது ஏன்?
விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரிமாளிகைக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு காவலரணில் இடம்பெற்றுள்ளது.
குறித்த அதிரடிப்படை வீரர் கடமையில் இருந்தபோதே தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.