இரவில் நித்திரையாகமல் தவிக்கப் போகின்றார்கள் யாழ் குடும்பப் பெண்கள்??
இரவிலும் பகலிலும் மின்சாரத்தடை காரணமாக முக்கிய தொலைக்காட்சி நாடாகங்களை பார்க்காது தவிக்கின்றார்கள் யாழ்ப்பாணம் உட்பட்ட பிரதேசங்களில் வாழும் குடும்பப் பெண்கள்.
இதே வேளை யாழ்ப்பாணம் கரவெட்டிப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு வேளை இரு மணித்தியாலங்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்மானம் நடைமுக்கு வந்தால் ஒரு பகுதியினர் கேபிள் வேண்டாம் நாங்கள் டிஸ் அன்ரனா வாங்குவோம் என்பார்கள் என பல விமர்சனங்கள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் இது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வீடுகளில் இரவு வேளைகளில் மின் தடைப்படுவதால் பெண்களே பெரும் வேதனைப்படுவதாகவும் நாடகங்களை பார்ப்பது தடைப்படுவதுடன் மின் இல்லாத நேரங்களில் வீடுகளில் உள்ள குடும்பஸ்தர்கள் தங்களை தொல்லைப்படுத்த முற்படுவதையும் பெண்கள் உணர்ந்துள்ளனர்.