சுன்னாகம் கிணறுகளுக்குள் கழிவு ஒயில்!! 2 கோடி நட்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவதற்கு காரணமாக அமைந்த நொதேர்ன் பவர் நிறுவனம், பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு 20 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
சுன்னாகம் மின் வழங்கல் நிலையதமை அண்டிய பகுதிகளில் நீர் மாசடைந்துள்ளதாக அறிவித்த உயர் நீதிமன்றம் இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.
சூழல் மற்றும் இயற்கை ஆய்வு நிலையத்தின் கலாநிதி ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்த மனு மீதே உயர் நீதிமன்றம் இந்த்த் தீர்ப்பை வழங்கியது.
நொதேர்ன் பவர் நிறுவனத்தால் வெளியேற்றப்பட்ட கழிவு ஒயிலால் நிலத்தடி நீர் மாசடைந்தது. அதனால் 500 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நொதேர்ன் பவர் நிறுவனம் சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தியை மறைக்க மாகாண மற்றும் மத்திய அரசின் நிறுவனங்களும் உடந்ரதையாக இருந்துள்ளன. அவைகள் நொதேர்ன் பவர் நிறுவனத்தை பாதுகாப்பதற்காகவே செயற்பட்டன என்று மனுதாரரான கலாநிதி ரவீந்திர காரியவசம் சுட்டிக்காட்டினார்.
இந்த மனுவில் இந்தியாவின் தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்புகளை விவரித்த உயர் நீதிமன்ற அமர்வு, இலங்கையின் சுற்றுச் சூழல் பாதிப்புத் தொடர்பான இந்த வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபடவில்லை என பல்வேறு தரப்புகள் வாதிட்டு வந்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களின் வாதத்தை பொய்ப்பித்துள்ளது.