கிசு கிசுபுதினங்களின் சங்கமம்

சனத் ஜெயசூரியாவின் கள்ளக் காதலி ஹிரு TV ஓனரின் மனைவி

தேவைப்பட்டால் மகிந்த ராஜபக்ஷ என்னோடு பேசிய ஒலி- நாடாவைக் கூட நான் வெளியிடுவேன் என்று, இன்று(22) பாராளுமன்றில் ரஞ்சன் ராமநாயக்க சொல்ல. அனைத்து தரப்பும் கப்- சிப் ஆனாது. சிறையில் இருந்து ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிக் கொண்டு பாராளுமன்றம் வந்த ரஞ்சன் ராம நாயக்க, இன்று ஹிரு TV உரிமையாளர் ரயனர் சில்வாவை கிழி கிழி என்று கிழித்தார். நடந்த விடையம் பலருக்கு தெரியாது…

சில ஆண்டுகளுக்கு முன்னர் தான், நட்சத்திர கிரிகெட் வீரர் சனத் ஜெயசூரிய ஒரு பெண்ணோடு மிக மிக நெருக்கமாக ஆடைகள் இல்லாமல் இருந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. அது வேறு யாரும் அல்ல ஹிரு TV உரிமையாளர், ரயனர் சில்வாவின் மனைவி மல்லிகா தான் அது. இந்த வீடியோவை வெளியே விட்டது முன் நாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம நாயக்க தான்.

இது இவ்வாறு இருக்க, ஹிரு TV உரிமையாளர் ரயனர் சில்வாவின் சகோதரர் தான் துமிந்த சில்வா. இவர் தான் MP ஹிருனிக்காவின் தந்தை பரத லஷ்மன பிரேமசந்திரவைக் கொலை செய்து தற்போது சிறையில் உள்ளார். சகோதரர் துமிந்த சில்வாவை சிறையில் இருந்து மீட்டெடுக்க என்ன வேண்டும் என்றாலும் செய்யத் துடிக்கும், ஹிரு TV உரிமையாளர். ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் இருந்து பொலிசார் கைப்பற்றிய சில ஒலி நாடாக்களை, எடிட் செய்து தனக்கு தேவையான விடையங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் தனது சகோதரர் துமிந்த சில்வாவின் வழக்கை விசாரித்து வந்த நீதிபதியோடு ரஞ்சன் ராமநாயக்க பேசிய ஒலி நாடாவும் உள்ளது. வழமையாக தான் யாரோடு பேசினாலும் அதனை அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்து வைத்திருப்பது ரஞ்சன் ராமநயக்கவின் வழக்கமாம்.

இவரிடம் நூற்றுக்கணக்கான இது போன்ற பதிவுகள் உள்ளதாம். இதில் சில பதிவுகளை இவர் வெளிநாட்டில் உள்ள வங்கி லாக்கர்களில்(Bank Locker) கூட வைத்திருக்கிறார் என்ற ரகசிய செய்திகளும் அதிர்வு இணையத்திற்கு கசிந்துள்ளது. இவரோடு மகிந்த ராஜபக்ஷ பேசிய ஒலி நாடாவும் உள்ளதால், தற்போது மகிந்த & Coவைக்கூட இவர் கூட மறைமுகமாக அச்சுறுத்தி உள்ளார் என்பது ஒரு புறம் இருக்க. ஆப்பரேஷன் ஜெயில் பிரேக்(Operation Jail Break)) என்று ஒரு திட்டத்தை தீட்டியுள்ள ஹிரு TV உரிமையாளர் ரயனர் சில்வா, தனது சகோதரருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் ராமநாயக்கவோடு தொடர்பில் இருந்ததாக கூறி. ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிசார் கைப்பற்றிய ஒலி நாடாவை வெளியே விட்டு. தீப்ர்ப்பை பிழை சொல்லி, தனது சகோதரரை வெளியே எடுக்க பெரும் முயற்ச்சி செய்து வருகிறார்.

ஆனால் பலரது அந்தரங்க தகவல்களை வைத்திருக்கும் ஹிரு TV உரிமையாளர், தனது ஊடகத்தை வைத்து பல அரசியல்வாதிகளை மிரட்டி வருவதோடு. கோட்டபாய ராஜபக்ஷவையும் அடி பணிய வைத்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது சந்தேகமே. ஆனால் ஹிரு போன்ற ஊடகம் ஒன்று, எப்படி ஒருவரின் அனுமதி இன்றி சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்யப்பட்ட உரையாடலை வெளியிட்டது ? என்பது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. முறைப்படி ஹிரு TV மீது இலங்கை அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதனை இலங்கை அரசு ஏன் செய்யவில்லை என்பதும் , பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பல அரசியல் தலைவர்களது, ரகசிய செய்திகள் என்னிடம் உள்ளது. என்று கூறி ஹிரு தொலைக்காட்சி உரிமையாளர் பலரை மிரட்டி வருகிறார். அவர் மீது எந்த ஒரு விசாரணையும் இதுவரை ஏன் இடம்பெறவில்லை என்பது பெரும் கேள்விக்குரிய விடையமாக உள்ளதோடு. இலங்கை அரசின் நம்பக தன்மை மீதும் பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.