யாழில் வருடப்பிறப்பில் வடிவேலு பாணியில் சம்பவம்!! வாழ்த்துக் கூறி மோதிரத்தை உருவிய கில்லாடி!!
யாழ்.சுண்டுக்குளி பகுதியில் புதுவருட வாழ்த்து கூறும் சாக்கில் கையிலிருந்த மோதிரத்தை அபகாித்து சென்ற சம்பவம் ஒன்று நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
புதுவருட தினத்தன்று ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை கொண்டாடுவது வழமை.
இந்நிலையில் சுண்டுக்குளி பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த நபர் ஒருவரிடம் சகஜமாக பழகிய சந்தேக நபர் அவருக்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து கைகுலுக்கி உள்ளார் .
இதன்போது மோசடியாளர் கைகுலுக்கி அவர் கையில் இருந்த மோதிரத்தை அபகரித்து விட்டு அப்படியே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மோதிரத்தை இழந்துள்ளார்.
இதனையடுத்து மோதிரத்தினை இழந்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

