புதினங்களின் சங்கமம்

வவுனியாவில் ஒரு வயதுப் பெண் குழந்தை சடலமாக கிணற்றில் இருந்து மீட்பு!!

வவுனியாவில் ஒரு வயது பெண் குழந்தை கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

அம்மிவைத்தான் கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. நேற்று நள்ளிரவு 12 மணியவில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தை காணமல் போயிருந்த நிலையில் குழந்தையை வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர். இந் நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் சடலம் அவர்களது வீட்டுக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்த அயலவர்கள், ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.