நாயாற்றில் மூழ்கி தந்தை பலி! மகனை காணவில்லை!!
முல்லைத்தீவு – நாயாறு நீரேரியில் மூழ்கி ஒருவர் பலியாகியுள்ளார். மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
இதன்போது குறித்த நீரேரியில் குளிக்க சென்ற களனிய- பலுகம ரக்கன் தலுவ பகுதியை சேர்ந்த தந்தையான வருண கமகே (55-வயது) பலியானதுடன், அவரது மகன் லபிது கமகே (16-வயது) காணாமல் போயுள்ளார்.
கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இராணுவ வீரர் ஒருவரை பார்வையிட வந்த பாேதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

