புதினங்களின் சங்கமம்

வெடுக்குநாறி மலையில் பொலிசார் நடாத்திய கொடூர கேவலங்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள் இதோ

சுமார் 2,000 ஆண்டுகள் பாரம்பரியம் வெடுக்குநாறி மலைக்கு இருக்கின்றது
300 மீட்டர் உயரமான மேற்படி மலையின் அடிவாரத்திலுள்ள தமிழ் பிராமிய கல்வெட்டிக்கள், வட்டெழுத்துக்கள் இந்த ஆலய சூழலின் தொன்மைக்கு சான்று பகிர்கின்றன.
இங்குள்ள பிராமி எழுத்துக்களோடு இணைந்த எச்சங்களும், நாக வழிபாடும், நீர்ப்பாசன கட்டமைப்புகளும் விஜயன் வருகைக்கு முன்னரான தமிழ் நாகர்களின் தொன்மையின் அடையாளமாக இருக்கின்றன
இந்த பண்பாட்டு மலையின் உச்சியில் ஆதிலிங்கேஸ்வர் என்கிற சிவலிங்கம் அமைந்துள்ளது .
5 தலைமுறையினருக்கு மேலாக சைவமக்களின் வழிபாட்டு தலமாக ஆதிலிங்கேஸ்வர் இருக்கின்றார்
ஆனால் 2018 ஆம் ஆண்டு முதல் மேற்படி ஆலய வழிபாடுகள் மீது இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் துணையுடன் பிக்குகள் வன்முறையை ஏவி விட்டு வருகின்றார்கள்
இதற்கு தொல்லியல் திணைக்களம் துணை நிற்கின்றது
ஒரு தடவை இங்குள்ள சிவலிங்கம் கூட அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது
ஆலய பூசகர்கள் , அறங்காவலர் சபை உறுப்பினர்கள் கூட பல தடவை கைது செய்து இம்சிக்கபட்டுள்ளார்கள்
இன்று சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டபொதுமக்கள் நீதிமன்ற தீர்ப்புகளை உதாசீனம் செய்து கைது செய்ய பட்டுள்ளார்கள்
குழந்தைகளுக்கு கூட குடிநீரை அனுமதிக்காமல் இம்சித்துள்ளார்கள்
வரலாற்று உண்மைகளை மறைத்து வெடுக்குநாறி மலை சூழல் ‘வட்டமான பர்வத விகாரை’ என்கிற பௌத்த ஆலயத்தின் நிலம் என அடையாளப்படுத்த முயலுகின்றார்கள்
அதாவது 2 தூபிகளின் (Stupas) இடிபாடுகள் இங்குள்ளதாக மேதானந்த எல்லாவல தேரர் எழுதிய கற்பனை கதை மூலம் இதை நிரூபிக்க பாடுபடுகின்றார்கள்
பாரம்பரிய வழிபாட்டு உரிமையை மறுத்து பூர்விக நிலத்தை அத்துமீறி சிதைப்பது பண்பாட்டு படுகொலை Cultural Genocide இல்லையா ?