•“பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் தமிழீழம் பெற்று தருவார்” என்று கூறுவது ஏன்??

•“பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.
அவர் திரும்பிவந்து தமிழீழம் பெற்று தருவார்” என்று கூறுவது

(1) பல பில்லியன் டொலர் பணத்தை பட்ஜட்டில் ராணுவத்திற்கு ஒதுக்குவதற்கு இலங்கை அரசுக்கு உதவுகிறது.

(2)”புலிகளை அடக்குவேன்” என்று சொல்லி தேர்தலில் வெல்வதற்கு கோத்தபாயாவுக்கும் மகிந்தராஜபக்சவுக்கு உதவுகிறது.

(3)பல்லாயிரக் கணக்கான ராணுவத்தை தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் வைத்திருக்க இலங்கைஅரசுக்கு உதவுகிறது.

(4)இந்திய அரசு தொடர்ந்தும் புலிகள் இயக்கத்தைத் தடை செய்து வருவதற்கு உதவுகிறது.

(5) இலங்கை அரசுக்கு இரண்டு போர்க்கப்பலை இலவசமாக வழங்கியதுடன் ராணுவ உதவிகளை வழங்கவும் இந்திய அரசுக்கு உதவுகிறது.

(6)சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமை வைத்திருக்கவும் அதில் அப்பாவி அகதிகளை அடைக்கவும் தமிழக அரசுக்கு உதவுகிறது.

(7)சோனியா காந்திக்கு இருக்கும் கறுப்புபூனை பாதுகாப்பை நீக்காமல் வைத்திருப்பதற்கு உதவுகிறது.

(8)மலேசியாவில் ஈழத் தமிழரை ஆதரிப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதற்கு மலேசிய அரசுக்கு உதவுகிறது.

அதைவிட,

•தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு தலைமை உருவாவதை தடுக்கிறது.

•தமிழ்மக்கள் மீண்டும் போராடாமல் பிரபாகரன் வருகைக்காக காத்திருக்க வழி செய்கிறது.

•பிரபாகரன் மரணம் குறித்து உண்மையை அறியா வண்ணம் மக்களை தடுக்கிறது.

•புலிகளின் சொத்தை புலத்து வியாபாரிகள் தொடர்ந்து அனுபவிக்க உதவுகிறது.

•சில தமிழக அரசியல்வாதிகளுக்கு ஏமாற்று அரசியல் செய்ய உதவுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக,

தனது 10வயது மகனைக்கூட காப்பாற்றாமல் தான் மட்டும் தப்பினார் பிரபாகரன் என்ற பழிச்சொல்லுக்கு வழி வகுக்கிறது.

இத்தனை வருடமாகியும் வராமல் ஏன் ஒளித்து இருக்கிறார் என்று மக்கள் விசனப்பட வைக்கிறது.

மேலும் அவருக்கு ஒரு வீர வணக்கம்கூட செலுத்தமுடியாத நிலையில் தமிழினத்தை வைத்திருக்கிறது.

குறிப்பு – இது ஒரு மீள்பதிவு ஆகும்.

error

Enjoy this blog? Please spread the word :)