மாவீரர், போராளி குடும்பத்திற்கு உதவக்கூடாது-இலங்கையன் அமைப்பு எச்சரிக்கை
மாவீரர் மற்றும் போராளிகளின் குடும்பங்களுக்கு மன்னார் நகர சபையின் தலைவரினால் சலுகைகள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கப்படுப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் .என்று குறிப்பிட்டு ‘இலங்கையன்’ எனும் பெயரில் எச்சரிக்கை கடிதம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை தனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.


