Home புதினங்களின் சங்கமம் வவுனியாவில் பாம்பு தீண்டி ரித்திகா பலி! காட்டுக்குள் யானைகள் இடைமறித்ததால் நடந்த சோகம்!

வவுனியாவில் பாம்பு தீண்டி ரித்திகா பலி! காட்டுக்குள் யானைகள் இடைமறித்ததால் நடந்த சோகம்!

பாம்பு தீண்டிய யுவதியொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, யானைகள் இடைமறித்ததால் மாற்றுப்பாதையால் பயணித்ததால் ஏற்பட்ட தாமதத்தால் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச்சம்பவம் வவுனியா மாவட்டம், சின்னப்பூவரசங்குளம் பகுதியில் நடந்தது.

கடந்த 21ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் பாம்பு தீண்டிய யுவதியொருவரை சின்னப்பூவரசங்குளம் – நயினாமடு வீதி வழியாக நெடுங்கேணி வைத்தியசாலைக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியில் யானைகள் மறித்ததால் உயிர் பயத்தில் திரும்பி மதியாமடு வழியாகச் சுற்றிச் செல்ல நேரிட்டது.

அந்தத் தாமதமே அவரது உயிருக்கு எமனாகிப் போனது. மயக்கமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் மூளைச் சாவு ஏற்பட்டு, இன்று (25) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கவிராஜ் ரித்திகா (21) என்பவரே உயிரிழந்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments