Home புதினங்களின் சங்கமம் தமிழர் பிரதேசங்களில் தேசியத் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்! வீடியோ

தமிழர் பிரதேசங்களில் தேசியத் தலைவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய மக்கள்! வீடியோ

மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின்  72வது, பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள அவரது வாழ்ந்த வீட்டு முற்றத்தில் கொண்டாடப்பட்டது.

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள் | Celebration Ltte Leader Birthday In Jaffna

வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள அவரது பூர்வீக வீடு இருந்த காணியில் இன்றைய தினம் (26) குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

பிறந்த  நாள் நிகழ்வில் சிறுவர்கள் , பொதுமக்கள் , மக்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது இனிப்பு வழங்கி எந்தவித அரசியல் தலையீடுகளும் இன்றி வெடி கொழுத்தி விடுதலைபுலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள் | Celebration Ltte Leader Birthday In Jaffna

குறித்த காணி சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிறந்த நாள் நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள் | Celebration Ltte Leader Birthday In Jaffna

அதேவேளை கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்! குவிந்த மக்கள் | Celebration Ltte Leader Birthday In Jaffna

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments